ஆதிமங்கல விநாயகர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை!
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் ஆதிமங்கல விநாயகர் கோவிலில் ராகு,கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதுவரை கன்னிராசியில் சஞ்சரித்து வந்த ராகு, சிம்மராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதே போல மீனராசியில் சஞ்சரித்து வந்த கேது கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி சென்று சஞ்சரிக்கிறார். இதனால் மேஷம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு ராசிகாரர்கள் நற்பலன் பெறுகிறார்கள். ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை கவுண்டம்பாளையம் சிவநகர், சிவாலய வளாகத்தில் உள்ள ஆதிமங்கல விநாயகர் கோவிலில் நடந்தது. முதலில் பரிகார பூஜைகளும், தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், சேரன் நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் வசிக்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.