உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் ராகு - கேது பெயர்ச்சி வழிபாடு

உடுமலை கோவில்களில் ராகு - கேது பெயர்ச்சி வழிபாடு

உடுமலை: ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்புற கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு, ேஹாமங்கள் நடந்தன. உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், நேற்று மதியம், 12:01 மணிக்கு, வளாகத்தில் உள்ள நவகிரகத்தில், ராகு மற்றும் கேது கிரகங்களுக்கும், பிற கிரகங்களுக்கும் பால், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், அரிசி மாவு, நெய், தேன் உள்ளிட்டவற்றால், அபிேஷகம் செய்யப்பட்டது. அனைத்து கிரகங்களுக்கும் சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. முன்னதாக, ராகு, கேது உள்ளிட்ட கிரகங்களுக்கு, சிறப்பு ேஹாமங்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆயுள் ேஹாமங்கள், பூர்ணாகுதியும் நடந்தது; பரிகார ராசிகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

ேஹாமங்களை தொடர்ந்து, நவகிரகங்களுக்கு, 108 வலம்புரி சங்காபி ேஷகம் நடந்தது. ராகு - கேது பெயர்ச்சி முன்னிட்டு, கோவிலில் நடந்த, சிறப்பு ேஹாமம் மற்றும் பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். உடுமலை பழனியாண்டவர் நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் உள்ள நவக்கிரகத்தில், ராகு-கேதுவுடன், பிற கிரகங்களுக்கும், அபிேஷகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள நவகிரகத்தில், ராகு - கேதுவுக்கு, பால், சந்தனம், மஞ்சள் அபிேஷகமும், அலங்காரமும், பூஜையும் செய்யப்பட்டது. போடிபட்டி, பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !