உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு, கேது பெயர்ச்சி: தர்மபுரி கோவில்களில் வழிபாடு

ராகு, கேது பெயர்ச்சி: தர்மபுரி கோவில்களில் வழிபாடு

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் நடந்த, ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜையில், பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி அடுத்த, காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்மாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், ராகு கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று மதியம், 12.30 மணிக்கு சிறப்பு ஹோமமும், ராகு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜை நடந்தது. காரிமங்கலம் மந்தை வீதி ராஜகணபதி கோவிலில், ராகு கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், சக்திவிநாகயர் வேல் முருகன் கோவில், குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் சிவ சுப்பிரமணியசாமி கோவில், அப்பாவு நகர் விநாயகர் கோவில் உள்பட, பல்வேறு கோவில்களில் ராகு கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !