உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திறந்தவெளியில் சீரழியும் மாமல்லபுரம் பெருமாள் கோவில் தேர்

திறந்தவெளியில் சீரழியும் மாமல்லபுரம் பெருமாள் கோவில் தேர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் தேர், திறந்தவெளியில் சீரழிகிறது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், பூதத்தாழ்வார் அவதார உற்சவம் ஆகியவற்றின்போது, தேர் வீதியுலாவிற்கு, மரத்தேர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.சென்னை பக்தரால், நன்கொடையாக அளிக்கப்பட்ட இந்த தேர், கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டு, அதை பாதுகாக்கும் வகையில், தகர தகடுகளால் கூரை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாத மழையின்போது பலத்த காற்றால், கூரையிலிருந்த தகடுகள் விழுந்தன. மற்ற தகடுகளை காப்பதற்காக, கோவில் நிர்வாகம் அவற்றை அகற்றியது. ஆனால், தற்போது வரை கூரையில் தடுகளை அமைக்காததால், திறந்தவெளியில் தேர் சீரழிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !