மரக்காணம் பூமீஸ்வரர் கோவில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :3808 days ago
மரக்காணம்: மரக்காணம் பூமீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மரக்காணம் இ.சி. ஆர்.,சாலையில் உள்ள பூமீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. இதில் பூமீஸ்வரர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசணம் செய்தனர்.