உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனி லிங்க தரிசனம், பொருட்காட்சி

பனி லிங்க தரிசனம், பொருட்காட்சி

சேலம்: சேலம், ஜவகர் மில் திடலில், செயற்கையாக உருவாக்கப்பட்ட அமர்நாத் பனி லிங்க தரிசன பொருட்காட்சி, 80 அடி உயரத்தில், 320 அடி அகலத்தில் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சேஸ்நாத்ஜி எனப்படும் எழுதலைகள் கொண்ட பிரமாண்ட நாகம் நுழைவு வாயில், விநாயகர், கிருஷ்ணன், ராதை, அர்த்தநாரீஸ்வர் சுவாமிகளை தரிசனம் செய்யலாம். அமர்நாத்தில் உள்ளது போல், பெல்காம், ஆனந்த்நாத், சந்தன்வாடி, மிசுடாப், திரிசூல்மந்திர், காசிக்குண்டு, போல்நாத்ஜி பர்பானி, பாபா அமர்நாத், பஞ்சாகரணி என, ஒன்பது வளைவுகள், மூன்று நீர்வீழ்ச்சி, மலைபாதை, ஆறு, பனிப்பிரதேசம், யாக் மாடுகள், மான்கள் ஆகியன தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பனிலிங்கம் தரிசனம், காலை, 11 மணி முதல், இரவு, 10 மணி வரை நடக்கும். மாலை, 4 மணிக்கு பொழுதுபோக்கு பொருட்காட்சி நடக்கிறது. இங்கு, 60 ஸ்டால், ஜெயிண்ட் வீல், கொலம்பஸ், டோரா டோரா ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. வரும், பிப்ரவரி, 7ம் தேதி வரை, பனிலிங்க தரிசனம் மற்றும் பொருட்காட்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !