உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் அறுபடை வீடு யாத்திரை திருவிழா

பாலமுருகன் கோவிலில் அறுபடை வீடு யாத்திரை திருவிழா

குமாரபாளையம்: குமாரபாளையம்-சேலம் பிரதான சாலையில் உள்ள, பாலமுருகன் கோவில் அறுபடை வீடு யாத்திரை திருவிழா, ஜன., 3ம் தேதி கணபதி யாகத்துடன் துவங்கியது. தினசரி காலை மற்றும் மாலை கணபதி மற்றும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் (7ம் தேதி) காலை, பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று, முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார ஆராதனைகள் நடந்தன. நிறைவுநாளான இன்று, முருக பக்தர்கள் அறுபடைவீடு புனித யாத்திரை செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !