கைலாசநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை
ADDED :3819 days ago
நங்கவள்ளி: ராகு, கேது பெயர்ச்சியை ஒட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நவகிரகங்களில் ஒன்றான ராகு, கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும், கேது, மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், நேற்று, மதியம், 12.32 மணிக்கு இடம் பெயர்ந்தது. ராகு, கேது பெயர்ச்சியை ஒட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், உலக நன்மைக்காக, கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.