விரயாச்சிலை ஈஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா
ADDED :3819 days ago
குளித்தலை: ஆர்.டி.மலை விரயாச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடந்த ராகு, கேது பெயர்ச்சி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தோகைமலை பகுதி, ஆர்.டி.மலை மீது விரயாச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. பரிகாரங்களுக்கு புகழ்பெற்ற தலமான இக்கோவிலில், ராகு, கேது பெயர்ச்சிவிழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் கந்தசுப்ரமணியசிவாச்சாரியார், வேதரத்தினம் குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.