உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலமாற்றம்:வாட்ஸ் - ஆப்பில் சிவ வழிபாடு!

காலமாற்றம்:வாட்ஸ் - ஆப்பில் சிவ வழிபாடு!

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில், வாட்ஸ் - ஆப் குழு மூலம், சைவ ஆன்மிக வழிபாடு பற்றிய தகவல்கள் பகிரப்படுகின்றன. வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், பள்ளிக்கரணையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில், சாந்தநாயகி அம்மன் மற்றும் சிவபெருமான், மூலவர்களாக உள்ளனர். விளக்கம்கோவில் சார்பாக, ஆதிபுரீஸ்வரர் என்ற பெயரில், வாட்ஸ் - ஆப் குழு உள்ளது. அதில், சைவ வழிபாடு குறித்த தகவல், ஆன்மிக தகவல்களுக்கான விளக்கம், கோவில் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் பகிரப்படுகின்றன. கோவில் வளாகத்தினுள், அந்த குழு பற்றிய தகவல், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில், சேருவதற்கான தகவலும், அங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை ஆரம்பித்த, அந்த கோவிலின் பக்தரான, சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த மீனாகுமார், 42, கூறிய தாவது:முகநுாலில், சிவனடியார்களுக்கு என, தனி பக்கம் உள்ளது. அதில் உள்ளோர் சேர்ந்து, வாட்ஸ் - ஆப்பில் குழு ஆரம்பித்தனர். அதில், சைவ வழிபாடு குறித்த ஆன்மிக தகவல்களை பரிமாறினர். அதை பார்த்து, ஆதிபுரீஸ்வரர் கோவில் சார்பாக, எனக்கு தெரிந்த சில பக்தர்களுடன் இணைந்து, ஆதிபுரீஸ்வரர் பெயரில், 2014ம் ஆண்டு, டிசம்பரில் குழுவை ஆரம்பித்தேன். கட்டுப்பாடுபடிப்படியாக, அதில் பலர் இணைந்து, நுாறு பேர் சேர்ந்தனர். இதனால், மற்றொரு குழுவை ஆரம்பித்தேன். இப்படியே தொடர்ந்து, தற்போது, 11 குழுக்களில், 1,100 பேராக வளர்ந்துள்ளது. இதில், சைவ ஆன்மிக தகவல், கோவில் நிகழ்ச்சி தவிர, வேறு எதுவும் பகிரக்கூடாது என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக சேவைக்காக, இந்த குழுவை பயன்படுத்துகிறோம். இந்த குழுவில், வெளிநாடுகளில் வசிக்கும் சிவனடியார்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:மீனாகுமார்,94457 63019


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !