உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, மேல்மலையனுார், அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக, காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இரவு, 11:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் துவங்கியது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள், கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !