திருவெண்ணெய்நல்லூரில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :3708 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. காலை 9:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மாலை 6:00 மணிக்கு தீபாராதனை மற்றும் சகஸ்கரநாம அர்ச்சனையும் நடந்தது. ஏற்பாடுகளை அகோபிலமட நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்ய நாராயணன், பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.