உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பத்தில் தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம்!

மந்தாரக்குப்பத்தில் தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம்!

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி தைப்பூச பாதயாத்திரைக்குழு சார்பில் வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  அதையொட்டி, பெரியாக்குறிச்சி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்திலிருந்து காலை 11.00 மணியளவில் முருகன், வள்ளி, தெய்வாணை  சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் கடை வீதி வழியாக மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்கு வீதியுலா  வந்தனர்.  ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து, சிவன், பிள்ளையார், முருகன், கிருஷ்ணர் சுவாமிகள் வேடத்தில் ஊர்வலமாக வந்து ÷ நர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவிலில் தங்க வேலுக்கு சந்தனம், பால், தயிர், தேன், மூலிகைப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந் தது. பின்னர் வேலுக்கு அலங்காரம் செய்து அறுபடை திருப்புகழ்கள், பக்தி பாடல்கள் பாடி சிறப்பு பூஜை நடந்தது.  அதே போல் நெய்வேலி,  திட்டக்குடியில் புனித பழனி பாத யாத்திரை குழு சார்பில் தேவிமாரியம்மன் கோவிலில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்  செய்து வழிபாடு நடந்தது.  சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாளை (12ம் தேதி) புனித பழனி பாதியாத்திரை குழுவினர்  காலை 8.00 மணிக்கு பழனிக்கு நடைபயணம் புறப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !