வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 10,008 வடமாலை
ADDED :3932 days ago
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் அவதார தினத்தை முன்னிட்டு 10,008 வடமாலை சாத்த ப்பட்டது. திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் அவதார தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சீதா லட்சுமண ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 10,008 வடமாலை சாற்றி, சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் கோவிந்தசாமி, எழுத்தர் ஆழ்வார் மற்றும் உபயதாரர் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.