ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உற்சவம்!
ADDED :3932 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையெ õட்டி, ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, குழந்தையில்லா பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சியும், திருமண தடங்கல் உள்ள பெண்களுக்கு பரிகாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து, உற்சவர் ரேணுகா பரமேஸ்வரி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.