ஆத்ம நேச வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
ADDED :3928 days ago
கரூர்: கரூர் மாவட்டம், புலியூர் கொல்லபாளையத்தில் உள்ள ஆத்ம நேச வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஸ்வாமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், 1,008 வடைமாலை, 108 ஜாங்கிரி மாலை மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் சுவாமி பல்லக்கில் திருவிதி உலா நடந்தது. கோவிலில் இருந்து கொல்லப்பாளையம், கொளத்துப்பாளையம், கடைவீதி, ஆசிரியர் காலனி, செல்வநகர், அமராவதி நகர், திருச்சி மெயின் சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதுபோல், டி.என்.பி.எல்., ஆலை குடியிருப்பு வல்லபை கணபதி கோவிலில் உள்ள வரசக்தி ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டது. இரவு, 7 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது.