பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழா
ADDED :3713 days ago
உடுமலை: உலக நலம், உலக அமைதிக்கான பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழா, நேற்று உடுமலை அருகே, தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில் நடந்தது. தென்கயிலை உலக சமாதான ஆலயம். ஆலயத்தின் மகரிஷி பரஞ்ஜோதியார், உலக அமைதி வேண்டி, 26வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வியை, டிச., 20ம் தேதி துவக்கினார்; நேற்று நிறைவு செய்தார். இதற்கான விழா, சமாதான ஆலய வளாகத்தில் நடந்தது. உலக சமாதான ஆலய அறங்காவலர் விநாயகம் தலைமை வகித்தார். தென்கயிலை உலக சமாதான மகரிஷி பரஞ்ஜோதியார் அருளுரை வழங்கினார். உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர் சுந்தரராமன், பிரமிட் ஆன்மிக மன்ற இயக்குனர் பிரம்மர்ஷி பத்ரிஜி, காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா, உலக சமாதான ஆலய அனைத்து கிளைகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.