உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் 15ம் தேதி ருத்ராபிஷேகம்

பாடலீஸ்வரர் கோவிலில் 15ம் தேதி ருத்ராபிஷேகம்

கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வரும் 15ம் தேதி பொங்கல் அன்று மாலை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி தை பொங்கல் அன்று மாலை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி அன்று  மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், மகந்யாச பாராயணம், கலச பூஜையை தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் ருத்ர ஜபம்  நடக்கிறது.  மாலை 5:30 மணிக்கு வசோர்தரா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு கலசாபிஷேகத்தை  தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !