உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் மாசாணியம்மன் கோவிலில் பூஜை

ஓசூர் மாசாணியம்மன் கோவிலில் பூஜை

ஓசூர்: ஓசூர் சமத்துவபுரம் அருகே, புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நேற்று முன்தினம் இரவு மார்கழி அமாவாசையை முன்னிட்டு, நள்ளிரவு, 12 மணியளவில், கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் அபி?ஷகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !