உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவலூர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

கருவலூர் கோவிலில் லட்சார்ச்சனை விழா

அவிநாசி:அவிநாசி அருகே கருவலூர் கோவிலில் லட்சார்ச்சனை விழா இன்றும், நாளையும் நடக்கிறது.கருவலூர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு லட்சார்ச்சனை பெருவிழா இன்று காலை 9.00 மணிக்கு துவங்கி, மாலை வரை நடக்கிறது. மீண்டும் நாளை காலை துவங்கி, மதியம் 1.00 மணிக்கு பூர்த்தியடைகிறது. தொடர்ந்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி, நாளை மதியம் 1.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கருவலூர் கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், அறங்காவலர் குழு தலைவர் அவிநாசியப்பன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !