உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு கோவில்களில் கூடார வெள்ளி வழிபாடு

விஷ்ணு கோவில்களில் கூடார வெள்ளி வழிபாடு

திருவண்ணாமலை: ஆரணியில் உள்ள விஷ்ணு கோவில்களில், நேற்று அதிகாலை மார்கழி மாத கூடார வெள்ளி உற்சவ சிறப்பு வழிபாடு நடந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஆரணி பகுதியில் உள்ள விஷ்ணு கோவில்களில், மார்கழி, 1ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி, ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை தில்லாஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில், பச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோவில், சார்பனாபேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள சவுராஷ்டிரா கோதண்டராமர் கோவில் உட்பட விஷ்ணு கோவில்களில், மார்கழி வழிபாடு நடந்து வருகிறது. மார்கழி, 27ம் தேதியான நேற்று, கூடார வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை, 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி, வீர ஆஞ்சநேயர், ராமர், லட்சுமணர், ஆண்டாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !