தியாகராஜர் இசை நாடகம்
ADDED :3710 days ago
மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தின் 64வது ஆண்டு இசை விழாவை முன்னிட்டு தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் மகாலில் டிவிவரதராஜன் குழுவினரின், ஸ்ரீதியாகராஜர் வாழ்க்கை சரித்திர இசை நாடகம் நடந்தது.அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நாடக நடிகர்கள் நடித்துகாட்டினர். பாம்பே ஜெயஸ்ரீயின் பின்னணி இசையில் காட்சிகள் அரங்கேறின. வி.எஸ்.வி.,யின் கதை வசனம் பார்வையாளர்களை கவர்ந்தது. இன்று மாலை 6 மணிக்கு சந்தீப் நாராயணனின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடக்கிறது.