தோரணமலை முருகன்
ADDED :5280 days ago
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில், கடையத்திற்கு சற்றுமுன் மேற்குநோக்கி ஒருவழிப்பாதை வழியாகச் சென்றால் தோரணமலையை அடையலாம். இங்குதான் முருகப்பெருமான் கையில் வேலுடன், மயில் வாகனத்தில் அருள்புரிகிறார். தோரணமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 2000 அடி உயரம் கொண்டது. இங்குள்ள வற்றாத சுனைநீர் மிகவும் சுவையானது. இதில் நீராடினாலே தங்களது நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர, எதிரிகளின் தொல்லை அகல போன்ற பல வேண்டுதல்களோடு பக்தர்கள் முருகனை வணங்கிச் செல்கின்றனர். நினைத்த காரியங்கள் நிறைவேறியதும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை முருகப்பெருமானுக்கு செலுத்திவிட்டு செல்கின்றனர்.