கொரளூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3744 days ago
மயிலம்: மயிலம் அடுத்த கொரளூர் பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக,
ஆராதனை நடந்தது. பின்னர் நடந்த மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு திருக்கல்யாணம், உற்சவர் வீதியுலா நடந்தது.
தென்கொளப்பாக்கம் பெருமாள் கோவிலில் அர்ச்சனைகள், சிறப்பு வழிபாடு மற்றும் மகா
தீபாரனை நடந்தது. தொடர்ந்து நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், ஏராளமான மக்கள் சுவாமி
தரிசனம் செய்தனர். இதுபோன்று மயிலம், பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர்,
கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மார்கழி
மாத உற்சவம் நடந்தது.