சென்னிமலை தைப்பூச திருவிழா: கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு விவரம்!
சென்னிமலை: சென்னிமலை தைப்பூச தேர்திருவிழா, கொடியேற்றத்துடன் (16ம் தேதி)துவங்குகிறது.
இதையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: (17ம் தேதி) காலை இசை வேளாளர்கள் சமூகம் சார்பாக, 101 நாதஸ்சுர தவில் கலைஞர்கள் பங்கு பெறும் இசை வேள்வி, திருக்கல்யாணம் நடக்கிறது. வரும், 23ம் தேதி இரவு ஹரிப்பிரியா இன்னிசை இரவு நிகழ்ச்சி நடக்கிறது. தேராட்டம் நடக்கும், 24ம் தேதி இரவு, 9 மணிக்கு கொங்கு வேளாளர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஈரோடு கொங்கு ஆர்க்கெஸ்ட்ராவின் பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி, 25ம் தேதி இரவு வெள்ளோடு நாட்டுக் கவுண்டர்கள் சார்பாக நாதஸ்வர தவில் இசை கச்சேரி நடக்கிறது.
வரும், 26ம் தேதி இரவு, 9 மணிக்கு தைப்பூச இசைவிழா குழு சார்பாக புலவர் ராமலிங்கம்
தலைமையில் பட்டி மன்றம் நடக்கிறது. வரும், 27ம் தேதி இரவு, மெட்ரோ டெக்ஸ், சிரகிரி
டெக்ஸ், அம்மா டெக்ஸ், சென்னிமலை விசைத்தறி கூட்டுறவு சங்கம் இணைந்து
வாணவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 28 ம் தேதி இரவு 9.30
மணிக்கு செங்குந்த கைக்கோள முதலியார் அறக்கட்டளை சார்பாக சிறப்பு நாதஸ்வர
தவிலிசைக் கச்சேரி, 29ம் தேதி இரவு, 9 மணிக்கு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பாக இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது.