பழநியில் லட்சார்ச்சனை இன்று வெள்ளி ரதம்
ADDED :5215 days ago
பழநி:பழநியில் ஆடி லட்சார்ச்சனை நிறைவை முன்னிட்டு 108 கும்பங்களுடன் லலிதா சகஸ்ர யாகம் நடந்தது. பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் தினமும் லட்சார்ச்சனை நடந்தது. நிறைவு நாளான நேற்று, லலிதா சகஸ்ர யாகம் செய்யப்பட்டது. முன்னதாக கணபதி பூஜை, 108 கும்பங்களுடன் பூஜை நடந்தது. பின்னர் 108 சுமங்கலி பூஜை, கன்யா, வடுக, சவுபாக்ய திரவிய பூஜைகள் நடத்தப்பட்டன. அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம், சுந்தரமூர்த்திசிவம் குருக்கள் தலைமையில் பூஜைகளை நடத்தினர். கோயில் துணை கமிஷனர் மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு, பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளிரத ஊர்வலம் நடக்கிறது.