வில்லியனூர் கோவிலில் சதாசிவ சொரூப அலங்காரம்
வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேம் நடக்கிறது. கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. 14ம் தேதி கோபூஜை, 15ம் தேதி கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை துவங்கியது. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை, மாலை ஏழாம் கால யாக பூஜையும் நடந்தது. சதாசிவ சொரூப அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இன்று காலை 8:00 மணிக்கு மேல் எட்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மேல் ஒன்பதாம் காலயாக பூஜையும் நடக்கிறது. நாளை (20ம் தேதி) அதிகாலை 4:00 மணிக்கு கும்ப பூஜையும் பத்தாவது காலயாக பூஜையும், 5:30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், காலை 6:30 மணிக்கு நாடி சந்தானமும், காலை 7:15 மணிக்கு திருக்காமீஸ்வரர் கோகிலாம்பிகை மூலவர், விமானங்கள் மற்றும் ராஜகோபுரம் கலசங்கள் புறப்பாடு, காலை 9:20க்கு ராஜகோபுரங்கள் கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு கோகிலாம் பிகை சமேத திருக்காமீஸ்வரர் மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. பாலசுப்ரமணியம் சிவாச்சாரியார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பூஜைகள் நடத்தி வருகின்றனர்.