உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

கடேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில், புதிதாக அமைக்கப்பட்ட அமிர்த கடேசுவரர் கோவிலின்  கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த, 18ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, இறையாணை பெறுதல், ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, புனித மண் வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல், வாயிற்காவலர் வழிபாடு, திருச்சுற்று தெய்வங்கள் வழிபாடு, திருக்குடங்கள் பொலிவுறச் செய்தல், இளங்கோவிலில் இருந்து அருட் சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருளும் வேண்டுதல் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, முதல்நிலை வேள்வி சாலை வழிபாடு, முதற்கால வேள்வி, 108 திரவியங்கள் நல்குதல், 19ம் தேதி அதிகாலை, 5:30 மணி முதல், திருப்பள்ளி எழுச்சி, திருக்குறிப்பு திருமஞ்சனம், இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், எண்வகை மருந்து சாற்றுதல், மூன்றாம் கால வேள்வி நடந்தன. கடந்த, நேற்று அதிகாலை, 5:00 மணி முதல், திருப்பள்ளி எழுச்சி, திருக்கோவில் துாய்மையாக்குதல், நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம், நிறையவி செய்யப்பட்டது.  காலை, 9:10 – 10:10 மணிக்குள் நடந்த கும்பாபிஷேகம் விழாவில், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !