பண்ணைக்காடு ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3551 days ago
பண்ணைக்காடு: பண்ணைக்காடு ராமசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மூன்று நாள் யாகசாலை பூஜையில் வேதா அனுக்ஞை, சுதர்சன ஹோமம், புண்ணிய தீர்த்தம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சி நடந்தன.பின், மஹா பூர்ணாஹூதியுடன் கலசங்கள் புறப்பட்டன. ஸ்ரீ கமல கணபதி, ராமசுவாமி கோயில் கலசங்களுக்கு வேத மந்திரங்களுடன் புனித நீர் ஊற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பண்ணைக்காடு பேரூராட்சி தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் முருகன், கொடைக்கானல் நகராட்சி தலைவர் ஸ்ரீதர் பங்கேற்றனர்.