சர்வ சக்தி விநாயகர் கோவிலில் 29ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :3551 days ago
கடலுார்: கடலுார், அண்ணா நகர் சர்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 29ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. 27ம் தேதி மாலை யாக பூஜை துவங்குகிறது. 29ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரம், மூலவர் உட்பட அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.