சர்வ சக்தி விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!
கடலுார்: கடலுார், அண்ணாநகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை (29ம் தேதி) மகா கும்பாபி÷ ஷகம் நடக்கிறது. இதற்கான விழா கடந்த 25ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. மாலை 3:00 மணிக்கு கிரக்கோலமும், 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி நடைபெற்றது. 26ம் தேதி காலை சுதர்சன, தன்வந்திரி ஹோமங்கள் நடந்தது. மிரு த்சங்கிரஹணத்தைத்தொடர்ந்து விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்பந்தம் சாற்றி, அஷ்டலட்சுமி, மிருத்யுஞ்ச மற்றும் சண்முக ஹோமம் நடந்தது. நேற்று 27ம் தேதி காலை யாகசாலை பாலிகா பூஜையும், மாலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து இன்று 28ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனையடுத்து கும்பாபிஷேக தினமான நாளை (29ம் தேதி) காலை 4:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும், பின்னர் 8:40 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.