உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ப. வேலூர்: பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டையில் எழுந்தருளியுள்ள விநாயகர், முருகன், பகவதியம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை, 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9.30 மணிக்கு பக்தர்கள் காவிரியாற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைடைந்தனர். நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகபூஜை, ஹோமம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி மற்றும் இரண்டாம் கால யாகபூஜை நிறைவும், யாத்ர தானம், கடம் புறப்பாடும் நடந்தது. காலை, 7 மணிக்கு விநாயகர், முருகன், பகவதியம்மன் ஆகிய கோவில்களின் விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடந்தது. விழாவில் ப.வேலூர் எம்.எல்.ஏ., தனியரசு, பேரூராட்சி தலைவர் பொன்னி வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !