உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் மாசிமகப் பெருவிழா: ஐந்து தேர்கள் பொருத்தும் பணி தீவிரம்!

விருத்தகிரீஸ்வரர் மாசிமகப் பெருவிழா: ஐந்து தேர்கள் பொருத்தும் பணி தீவிரம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகப் பெருவிழாவிற்கு தேர்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா முன்னேற்பாடாக செல்லியம்மன் காப்பு கட்டுதலுடன், கடந்த 26ம் தேதி துவ ங்கியது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து இன்று ௨ம் தேதி தேரோட்டத்துடன் செல்லியம்மன் உற்சவம் முடிகிறது.  நாளை 3ம் தேதி ஆழத்து விநாயகர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி, 11ம் தேதி தேரோட்டமும், 12ம் தேதி தீர்த்தவாரியுடன் முடிகிறது. மாசி மகப் பெருவிழா 13ம் தேதி விருத்தாம்பிகை, பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் சன்னதியில் 11:20 மணியளவில் கொடியேற்றத்துடன் துவ ங்குகிறது. தொடர்ந்து, 24ம் தேதி வரை 12 நாட்கள் மாசி மகப் பெருவிழா நடக்கிறது. விழாவில் 21ம் தேதி 9ம் நாள் விழாவில் விருத்தகிரீஸ்வரர்,  அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக நான்கு கோட்டை வீதிகள் வழியாக பவனி வரும். இதற்காக,  ஐந்து தேர்கள் பொருத்தும் பணிகளை பணியாளர்கள் தீவிரமாக துவக்கியுள்ளனர். மேலும், தேரை இயக்குவது, திருப்புவது, நிறுத்துவது ÷ பான்றவைகளுக்காக புளியன், காட்டுவாகை மரக் கட்டைகள் மூலம் புதிய கட்டைகள் செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !