செல்லியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
விருத்தாசலம்: மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் விமான அலகு அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை சப்தமாதா சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான செடல் திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 10:00 மணியளவில் மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பிற்பகல் 12:30 மணிக்கு மேல் ஏராளமானோர் செடலணிந்து, கிரேன் மற்றும் டாடா ஏஸ் வேனில் தொங்கியபடி விமான அலகு அணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாலை 4:30க்கு மேல் 6:00 மணிக்குள் அலங்கரித்த தேரில் செல்லியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.