உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநறுங்குன்றத்தில் நற்காட்சி திருவிழா

திருநறுங்குன்றத்தில் நற்காட்சி திருவிழா

உளுந்தூர்பேட்டை: திருநறுங்குன்றம் பகவான் அப்பாண்ட நாதர் ஜினாலய நற்காட்சி திருவிழாவில் மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் ஸ்ரீ லட்சுமிசேன பட்டாரக சுவாமிகள் கொடியேற்றினார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநறுங்குன்றத்தில் அப்பாண்ட நாதர் ஜினாலயத்தில் நற்காட்சி திருவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடம் ஸ்ரீ லட்சுமிசேன பட்டாரக சுவாமிகள் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து ஸ்ரீ ஜினவாணி தேவிக்கு சதாஷ்டக வழிபாடு, நற்காட்சியருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர்கள் ஜெயசந்திரன், சக்கரவர்த்தி, ஜீவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !