உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவில் தேர் சோதனை ஓட்டம்

காசி விஸ்வநாதர் கோவில் தேர் சோதனை ஓட்டம்

பவானி: பவானி காவிரி வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் தேர் சீரமைக்கப்பட்டு, விரைவில் சோதனை ஓட்டம் நடக்கிறது. பவானி காவிரி வீதியில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவில் தேர் பழுதடைந்து பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது. சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம் மூலம் அரசிடம், 3.50 லட்சம், பவானி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஒரு லட்சம் என, மொத்தம் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில், சோதனை ஓட்டம் நடத்த தயார் நிலையில் தேர் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !