உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமகம்: 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

மகாமகம்: 3 மாவட்டங்களுக்கு விடுமுறை

சென்னை,: மகாமக பெருவிழாவையொட்டி, பிப்., 22ல், மூன்று மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாசி மாதம், குரு, சிம்ம ராசியில் இருக்கும் போது, மகம் நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும், பொருந்தி வரும் காலம், மகாமகம் ஆகும். இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அன்று, நதிகளில் புனித நீராடல் நடத்துவது சிறப்பு. கும்பகோணத்தில் மட்டும், புனித நீராடல் என்பது, மகாமக குளத்தில் நீராடுவதை குறிக்கும்.இந்த ஆண்டு மகாமகப் பெருவிழா, பிப்., 22ல் நடைபெறுகிறது. அன்றைய தினம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், மூன்று மாவட்டங்களில் உள்ள, வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை, நேற்று பிறப்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !