உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.30 லட்சம் காணிக்கை

சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.30 லட்சம் காணிக்கை

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் காணிக்கை செலுத்த, ஏழு நிரந்தர உண்டியல் மற்றும் திருப்பணி உண்டியல் ஒன்று உள்ளது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. இதன்படி பண்ணாரி கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, ஈரோடு உதவி ஆணையர் முருகையன், ஆய்வாளர் ஜெயமணி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. நிரந்தர உண்டியல்களில், 29 லட்சத்து, 87 ஆயிரத்து, 311 ரூபாய், திருப்பணி உண்டியலில், 67 ஆயிரத்து, 384, என மொத்தம், 30 லட்சத்து, 54 ஆயிரத்து, 695 ரூபாய் மற்றும் தங்கம், 202 கிராம், வெள்ளி, 1,607 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை எழுத்தர் ராஜூ மற்றும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், சென்னிமலை பகுதி கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !