திருவாரூரில் மலேசிய விநாயகர் கோயிலுக்கு தங்கரதம்!
ADDED :3554 days ago
திருவாரூர்: மலேஷியாவில் உள்ள கோர்ட்டுமலை ஸ்ரீவிநாயகர் கோயிலுக்கு புதிய தங்கரதம், திருவாரூரில் உருவாக்கப்படுகிறது. கோயில் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான திருப்பணிக்குழு செய்த முடிவுக்கு இணங்க, திருவாரூர் ஆண்டிப்பந்தல் மரபுசிற்பக்கலா கேந்திரத்தில் இதறகான துவக்கவிழா நடைபெற்றது. விழாவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகரும், கோர்ட்டுமலை விநாயகர் கோயில் தலைமை அர்ச்சகரும் ஆகிய சிவகுமார் பட்டர், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாதசிவாசாரியார், திருமருகல் நடராஜகுருக்கள் மற்றும் ரதஸ்தபதி திருநாவுக்கரசு பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் திருப்பணி நிறைவடைய விநாயகர் வழிபாடு புண்யாகவாசனம் ஆயுதபூஜைகள் நிகழ்த்தப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.