சுந்தர அய்யனார் கோவிலில் சன்னதிகளுக்கு குடமுழுக்கு
புதுச்சேரி: சுந்தர அய்யனார் கோவிலில் பரிவார தெய்வ சன்னதிகளுக்கு குடமுழுக்கு நடந்தது. ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகர் சுந்தர அய்யனார் கோவிலில் புதிதாக சப்த கன்னிகைகள், மற்றும் குருபகவான், சுந்தர பாலமுருகன், சுந்தர ராஜ பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான குடமுழுக்கு நீராட்டு விழா 4ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளும், தொடர்ந்து கலசங்கள் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 8.45 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் சப்த கன்னிகைகள் விமானத்திற்கு குடமுழுக்கும், அதனை தொடர்ந்து குருபகவான், சுந்தர பாலமுருகன், சுந்தர ராஜ பெருமாள் சன்னதிகளுக்கு குடமுழுக்கும் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு ஊர் மக்கள் பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று(6ம் தேதி) மாலை 6 மணிக்கு மண்டல பூஜைகள் துவங்குகிறது. ஏற்பாடுகளை மோரீசான் தோட்டம் ஞான முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.