காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி
காரைக்குடி:காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.காரைக்குடி தமிழ் இசை சங்கம், மியூசிக் அகாடமி இணைந்து நடத்தும், காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி, இன்று காலை 10.35 மணிக்கு ராமநவமி மண்டபத்தில் தொடங்கி, காலை 11.15 மணிக்கு திருவையாறு சுவாமிநாதன் வீணையுடன் இசை நிகழ்ச்சி தொடங்குகிறது. 12.45 மணிக்கு காரைக்குடி இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சி, மாலை வாசுதேவன் பாட்டு, தியாராஜன் மிருதங்கம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை தேசிய விருது பெற்ற கலைமணி காஷ்யப் மகேஷ் பாட்டு கச்சேரி நடக்கிறது. நாளை காலை 8.30 மணி முதல் 10 மணி வரை உள்ளூர், வெளியூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்ச ரத்ன கீர்த்தனை நடக்கிறது. பின்னர் சென்னை கிருத்திகா பரத்வாஜின் இசை சொற்பொழிவு, மாலை 3 மணி ஐஸ்வர்யா சுவாமிநாதன் பாட்டு, இரவு 7 முதல் 9 மணி வரை நாத பூஷணம் மாம்பலம் சகோதரிகளின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. மிருதங்க வித்வான் ராஜகோபாலன், சங்கரய்யர், சரளா, நீலாயதாஷி ஆகியோருக்கு ஸத்குரு தியாகராஜர் விருது வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தமிழ் இசை சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சுந்தர்ராமன், துணைதலைவர்கள் நீலாயதாஷி, ராகவன் செட்டியார், காரைக்குடி மியூசிக் அகாடமி தலைவர் அய்யப்பன், செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.