திருமலையில் சிங்கப்பூர் அமைச்சர் சுவாமி தரிசனம்!
ADDED :3562 days ago
திருப்பதி: சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், திருமலையில் நேற்று, சுவாமி தரிசனம் செய்தார். திருமலை ஏழுமலையானை வழிபட, சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், தன் குடும்பத்துடன், நேற்று முன்தினம் இரவு, திருமலைக்கு வந்தார். நேற்று காலை, ஏழுமலையானை வழிபட சென்றார். தேவஸ்தான அதிகாரிகள், அவரை வரவேற்றனர். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு, ஏழுமலையானுக்கு அணிவிக்கும் ஆபரணம், அலங்காரம், தினசரி கைங்கரியங்கள், பிரசாதங்கள் குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் விளக்கினர். ரங்க நாயகர் மண்டபத்தில், அவருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.