உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலப்பம்பட்டியில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

பாலப்பம்பட்டியில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

உடுமலை: உடுமலை, பாலப்பம்பட்டியில் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, 33வது ஆண்டு அன்னதான விழா நடந்தது. பாலப்பம்பட்டி காமாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இப்பகுதியில் ஆண்டு தோறும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதான விழா, நடந்து வருகிறது. பக்தர்களுக்கு உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை வழங்கப்பட்டன. இங்கிருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்காவடி மற்றும் மயில் காவடிகளை சுமந்து பாதயாத்திரை சென்றனர். பக்தர்கள் அனைவரும் ’அரோகரா’ கோஷத்துடன் காவடியுடன் ஆடிக்கொண்டு பாதயாத்திரை சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !