உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகாதேவி கோயிலில் தீர்த்தவாரியுடன் உற்சவ விழா நிறைவு!

ரேணுகாதேவி கோயிலில் தீர்த்தவாரியுடன் உற்சவ விழா நிறைவு!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி ரேணுகாதேவி கோயிலில் கடந்த ஒருவாரம் நடைபெற்ற உற்சவ விழா நேற்று ஆஞ்சநேய உற்சவம், தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இக்கோயில்விழா வ.புதுப்பட்டி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏழுநாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது இங்கு அருள்பாலிக்கும் ரேணுகாதேவியம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் எழுந்தருளி அருள்பாலிப்பார். இவ்விழாவின்போது சத்குரு தியாகராஜசுவாமிகள் ஆராதணை விழாவும் சேர்ந்து நடைபெறும். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். பல்வேறு சிறப்புகள் கொண்ட இவ்விழா ஜன.31 ல் கணபதிஹோமத்துடன் துவங்கியது. மூலஸ்தானமான குன்னுõரில் எழுந்தருளிய அம்மனுக்கு பாலேட்டி பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. 2ம் நாள் வ.புதுப்பட்டி வந்த அம்மனுக்கு எதிர்சேவையும் 3ம் நாள் அம்மன் வீதியுலாவும், 4ம் நாள் எண்ணெய் காப்பு உற்சவ விழாவும், 5ம் நாள் திருப்பாவுடை நிகழ்ச்சியும், தியாகராஜ சுவாமிகளுக்கு ஆராதணை வழிபாடும், இசை அஞ்சலி நிகழ்ச்சியும் 6ம் நாள் அம்மன் சுக்கிரவாரக் கொலுவும், தர்பார் காட்சியும் நடந்தது. ஏழாம் நாளான நேற்று ஸ்ரீராமநாம பஜனை மண்டலியாரின் சங்கீத கீர்த்தனைகளும், பஞ்சரத்ன கீர்த்தனை வழிபாடும் நடந்தது. இதனை தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவ விழா துவங்கியது. இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கரங்களுடன் சப்பரபவனி நடந்தது. கோயிலை சுற்றி வந்த ஆஞ்சநேயருக்கு எதிர்சேவையும், பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாக்களில் சேஷபுரம், மீனாட்சிபுரம், குன்னுõர், மகாராஜபுரம் கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கம்மவார் சங்க தலைவர் சுகேந்திரன், பொறுப்பாளர் ராஜலிங்கம், செயலாளர் ராஜாராம், நிர்வாகிகள் குமரேசன், பலராமன், ஜெயச்சந்திரன் ஸ்ரீனிவாசன், சந்திரன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !