சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
ADDED :3686 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் நந்திக்கு சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு நந்தி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் என்கிற திருச்சோபுரநாதர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, இரவு 7.00 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது, அன்னதானம் வழங்கப்பட்டது.