சோ.குப்பம் கோவில் 10ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :3687 days ago
செஞ்சி: சோ.குப்பம் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் 10ம் தேதி நடக்க உள்ளது. செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம் விநாயகர் கோவில், மகா மாரியம்மன் மற்றும் நவக்கிரகங்களுக்கான மகா கும்பாபிஷேகம் 10ம் தேதி நடக்க உள்ளது. அதனையொட்டி நாளை 9ம் தேதி மாலை முதற்கால யாக பூஜைகள் நடக்க உள்ளன. இதில் விநாயகர் வழிபாடு, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்க கிரகணம், அங்குரார்பணம், விசேஷ ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள் 10ம் தேதி காலை 7.25 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, தத்வார்ச்சனை, இரண்டாம் கால விசேஷ யாகங்கள், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனையை தொடர்ந்து 9.50 மணிக்கு கடம் புறப்பாடாகி 10.10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.