உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்: காத்திருந்து தரிசனம்

ராமேஸ்வரம்:கொட்டும் மழையிலும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தீபாவளி முடிந்ததும் இன்று காலை ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். காலை முழுவதும் ராமேஸ்வரம் பகுதியில் கனமழை பெய்தது. இதை பொருட்படுத்தாத பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து தனுஷ்கோடி உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் பார்வையிட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !