உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசேது கடலில் மகோதய அமாவாசை லட்சக்கணக்கானவர்கள் புனித நீராடல்!

ஆதிசேது கடலில் மகோதய அமாவாசை லட்சக்கணக்கானவர்கள் புனித நீராடல்!

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கோடியக்கரை,ஆடி சேது கடலில் மகோதய அமாவாசையை முன்னிட்டு,காஞ்சி சங்காரச்சாரியார் உட்பட லட்சணக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். நாகை மாவட்டம் கோடியக்கரை,ஆதிசேது கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை,புரட்டாதி மாத மகாளாய அமாவாசை,தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இவ்வாண்டு 27 ஆண்டுகளுக்கு பின் திருவோணம் நட்சத்திரம்,வியதியபாதி திதி அமாவாசை திங்கட்கிழமை சூரிய உதயத்தில் வருவதால் மகோதய அமாவாசை என்று வருகிறது.இந்த அமாவாசையில் திதி கொடுப்பதால் பல தலைமுறைகளுக்கு பலன் என்பதால்,நேற்று அதிகாலை முதல்,கோடியக்கரை ஆதிசேது கடலில் ஏராளமான மக்கள் குவிந்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள்,விஜேயந்திர சுவாமிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் ஆதிசேது கடலில் புனித நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !