உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலையில் குவிந்த கூட்டம்: பக்தர்களுக்கு சிறப்பு வேன் வசதி

சென்னிமலையில் குவிந்த கூட்டம்: பக்தர்களுக்கு சிறப்பு வேன் வசதி

சென்னிமலை: தை அமாவாசையை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோவிலில் வழக்கத்தை விட, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கோவில் பஸ்கள் மட்டுமின்றி, சிறப்பு வேன் வசதியும் செய்யப்பட்டது. பொது தரிசனத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !