கிறிஸ்தவர் தவக்காலம் தொடக்கம்
ADDED :3685 days ago
நாகர்கோவில்:கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் பிஷப் பீட்டர் ரெமிஜூஸ் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பல் பூசி தவகாலத்தை தொடங்கினார்கள்.
இது போன்று நாகர்கோவிலில் தென் இந்திய திருச்சபை, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களில் நேற்று நடந்த திருப்பலிகளில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தவ காலத்தை தொடங்கினார்கள்.